உலக நீரிழிவு நோய் தினம்



உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் மாதம் 14ம் திகதி அனுஸ்ரிக்கப்படுகிறது. சாள்ஸ் பெஸட் உடன் இணைந்து புpரட்டிக் பான்ரிங் இன்சுலினைக் கண்டறிந்தனர். இத் தினத்தை நினைவு கோரும் முகமாக புpரட்டிக் பான்ரிங்கின் பிறந்த தினத்தில் உலக நீரிழிவு நோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலக நீரிழிவு நோய் தினம் நீரிழிவு நோய் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் எனப்படுவது இன்சுலின் ஓமோன் உற்பத்தி குறைவடைவதால் இன்சுலின்  ஓமோனுக்கான தடை அதிகரிப்பதால் உடலில் இன்சுலின் ஓமோன் செயற்படுவதற்கான ஆற்றல் குறைவடைகிறது. இக் குறைபாடானது நீரிழிவு நோய் எனப்படுகிறது;.

குருதியில் அதிக வெல்லநிலை உடல் உறுப்புக்களைச் சிதைவடையச் செய்வதால் உயிர் அச்சுறுத்தும் சிக்கல்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதனால் இந்நோய் அமைதியான கொலையாளி எனவும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் வேறு பாதிப்புக்களிற்கும் உள்ளாகின்றனர். நீரிழிவுநோயாளிகளில் 20மூ ஆனோர் சிறுநீரக நோயாலும் ஒவ்வொரு வருடமும் 2.5 மில்லியன் நோயாளிகள் பார்வைக் குறைபாட்டிற்கும்  ஆளாகின்றனர். அத்தோடு வருடாந்தம் 1 மில்லியன் நோயாளிகள் அபயவங்களை இழக்கின்றனர்.

தாக்கம் நகர்ப் புறத்தில் 16.4 வீதமாகவும் கிராமப் புறத்தில் 8.7 வீதமாகவும் காணப்படுகிறது. அத்தோடு நாள் ஒன்றுக்கு 100 நபர் இருதய மற்றும் நீரிழிவு நோயால் இறக்கின்றனர்.

வயது,பால் வேறுபாடின்றித் தாக்கும் இந்நோய் விரைவான நகர மயமாக்கல்,ஆரோக்கியமற்ற வாழ்கை முறை, மன அழுத்தம், அதிக உடல் நிறை, புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் விரைவில் பரவிவருகிறது.
பரிகாரம் இல்லாத இந்நோயிடமிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி உருவாகமுன் தடுப்பது தான். இந் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறையில் கவனம் எடுக்க வேண்டியது கட்டாயம்.  மரக்கறி, பழவகை, மீன், கோழி இறைச்சி, கடலை பயறு, உழுந்து, குரக்கன், சிவப்பரிசி, ஆட்டாமா இவற்றை உட்கொள்வதோடு வீட்டில் சமைத்த உணவை உண்பது கட்டாயமானதொன்று.
சீனி, சக்கரை, தேன், வெல்லப்பாகு, கோதுமை மா அடங்கிய உணவு அரிசி மா அடங்கிய உணவு கொழுப்பு அடங்கிய உணவு என்பன உட்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.
மனஅழுத்தம் காரணமாகவும் இந்நோய் ஏற்படுவதால் இதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்வது அவசியம். பிரச்சனையை உறவினருடனோ அல்லது நண்பருடனோ பகிர்ந்து கொள்ளல் யோகாசனத்தில் ஈடுபடல் அத்தோடு முக்கியமானது எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றன மூலம் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

''தண்ணீர்'' குறும்படம்

                        

AAA மூவீஸ் வழங்கிய 2011 ம் ஆண்டிற்க்கான சிறந்த குறும்படத்திற்க்கான விருதை தட்டிச்சென்றது ''தண்ணீர்'' குறும்படம்.  இத்தோடு சிறந்த இயக்குனர், சிறந்த பாடல், சிறந்த குழந்தை நட்சத்திரம் என அடுத்தடுத்து விருதுகளைக் குவித்த பெருமையும் இதற்க்குத் தான். 

யுத்தம், வறுமை, காதல் எனப் பல்வேறு கோணங்களைக் குறும்படங்கள் பிரதிபலித்தாலும், ஏற்ப்பட்டதும் ஏற்ப்படப் போவதுமான ஓர் பிரச்சனை. .  இழந்ததும் இழக்கப்போவதுமான ஓர் துன்பம்... இவற்றை உயிரோட்டத்தோடு இணைந்து உணரவைத்துள்ளது ''தண்ணீர்'' குறும்படம்.

எந்தப் படைப்பு மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறதோ அது தனக்கான இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும். தண்ணீர் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் இது தண்ணீரின் ஏக்கத்தை பதிவுசெய்துள்ளது. இரு இளம் சிறார்கள் முலம் எதார்த்தத்தோடு கூடிய உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்கெண்ட கதையை விளக்க முகிலனுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை. வார்த்தைக்கு தடைபோட்டுவிட்டு இசையினாலேயே கருவை நிலையிருத்தியிருக்கிறது கதை. வெறுமனே சுவைக்காக எழுதப்பட்ட கதையின்றி நிஜத்தினையும் நியாயப்படுத்தியுள்ளது. நீரின் தேவை அவசியம் எல்லோரும் அறிந்ததே.  இருந்தாலும் இன்னமும் வீண்விரயங்களை நிறுத்தவில்லை இம் மக்கள். தண்ணீர்ப் பிரச்சனை எங்கோ தொலைவிலே இல்லை. எமக்கே ஏற்ப்பட்டுவிட்டது. போரால் பட்ட கொடுமைகள் ஓய்ந்து போக உலகே எதிர்நோக்கப்போகும் பாரிய சவால் தான் ''தண்ணீர்ப் பிரச்சனை''.இனியாவது நீரின் பெறுமதியை உணருங்கள் எனநெஞ்சங்களில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது இப்படம் . 
படைப்பாளிகள் எதிர்காலத்திற்கு வழிசொல்லுபவர்கள். முகிலனும் அதையே செய்திருக்கிறார். ஆரோக்கியமான விடயம். கோடிக் கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் விளம்பரங்களை விட சில நிமிடங்களிலேயே தண்ணீரின் ஏக்கத்தை கண்முன்னே காட்சிப்பபடுத்தியுள்ளார் இயக்குனர். 
இது போன்ற களம் படைப்பாளி செழுமை பெற வழிவமைத்துவிடும். சகோதரியின் தாகத்தை தீர்க்க போராடும் சிறுவன்.. சிறார்களின் பக்குவத்தைக் காட்டியுள்ளது. காட்சிகளைக் கச்சிதமாய் மனனப்படுத்த இசை தன் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறது. சிறுவனின் அடுத்தடுத்த துடிப்பு தான் இவ்இசை. படம் நடுவே வரும் பாடல்.. “ காய்ந்து போன தேசத்தில் ”.. கதையைப் பூரணப்படுத்தியுள்ளது. உணர்வுகளைக் கொந்தளிக்கவும் வைத்துள்ளது. வரண்டு போன தேசத்தில் நீர் இல்லை. மழை இல்லை.  விவசாயம் இல்லை. என அத்தனையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாடகத் தன்மைகளை இன்னும் தாண்டாத இந்தியப் படங்களுக்கு மத்தியில் புறவாழ்க்கையின் புரிதல் இத் தண்ணீரில் இருக்கிறது. வாழ்வியலோடு கூடிய இது போன்ற படங்கள் வரவேற்க்கத் தக்கவை. பாராட்டிற்க்கு உரியவை.
                                  
                                                                                                                 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முதியோர் இல்லம்

இது மனிதக் காட்சி சாலை . .
பால் குடித்த மிருகங்கள் அடிக்கடி
வந்து பார்த்துச் செல்கின்றன.

                     

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவசரம் - குறும்படம் ஒரு பார்வை...

யுத்த சூழல், வறுமை போன்றவற்றை மையப்படுத்தி வெளியாகும் குறும்படங்கறுக்கு மத்தியில் ''அவசரம் '' குறும்படம் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.

அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் இளவயது காதலர்களின் நிலையைக் கருவாகக் கொண்டமைந்த படம் தான் இது. வழக்கமான சோகப்பாணியில்லாது மகிழ்ச்சியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது கதை. எதார்த்தமான காட்சிகள், சாதாரண வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாமே பார்வையாளரை கதைக்குள் ஒன்றித்து வைத்துள்ளது.

தென்னிந்தியப்படங்களில் இல்லாத யாழ்ப்பாண மண் வாசனை படத்திற்கு கிடைத்த வெற்றி. புதுமுக நடிகர்கள். . இளவயதும் கூட.  சிறிது தளர்ச்சிகள் இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டத்தான் வேண்டும். முன்னனுபவமில்லாது எடுத்துக் கொண்ட செயலை வெற்றிகரமாகவே முடித்துள்ளனர் படக்குழுவினர்.
கருவிற்கேற்ப்ப காட்சிகளைக் கூட்டியிருந்தால் படம் முழுமைபெற்றிருக்கும்.

புதுமுகங்களான..  இயக்குனர் கஜதீபன். நடிகர்கள் - சிர்த்தார்த் யாழினி. அபிராமனின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது ''அவசரம்''

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முகவரியில்லாக் கடிதங்கள்...

என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக் கொண்டு

வெகு துாரம் எனை அழைக்கிறாய்..
கனத்துப் போன இதயத்தை உன் 
அன்பு மொழியால் வருடிவிடுகிறாய்..
சிவந்த கன்னங்களை உன் 
முத்தங்களால் ஈரம் செய்கிறாய்..
குழந்தை போல எனை எண்ணி 
அழகாய் அலங்கரிக்கிறாய்..
உனக்கு எப்போதும் நான் குழந்தை தான்.

கண் திறக்கும் போது எல்லாமே
கனவாய்ப் போகிறதே
உறக்கத்தைத் தொலைத்து விட்டு
இரவுகளோடு போராடும் 
உன்னவளைக் காண வரமறுக்கிறாயே..

உனைத் தொலைத்து இன்றோடு
முன்று வருடங்கள் ..

நினைவுகள் மட்டும் போதுமா?

ஆசையின்றி ஓசையின்றி
வார்த்தையின்றி மௌனமின்றி
வேகமின்றி மோகமின்றி
காத்திருக்கிறேன்....

என் தவிப்புக்கள் எல்லாம் 
உனையடையாது போகிறதே
முகவரியில்லாக் கடிதங்களாய்...

உடலாலும் மனதாலும்
பத்து மாதம் 
எனைச் சுமந்தாய்
உனக்குப் புரியாதா 
உன்னவளின் உண்வுகள்..
இந்த நம்பிக்கையில்

உன் நினைவுகளோடு 
மெல்ல நகர்கிறது என் நாட்கள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொழும்பு நோக்கிய உள்ளகப் பயிற்சியின் போது பல பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததோடு எதிர்பாராத அனுபவங்களும் எஞ்சின



ஓய்வே இல்லாத நேர அட்டவணையில் வேகமாக இயங்கியது நம் பயணம். கலையாத தூக்கத்தோடு ஆரம்பித்தாலும் கலையாத நினைவுகள் மட்டும் நெஞ்சங்களில் தேங்கின.
பாராளுமன்றம் பார்ப்பது என் பல நாள்க்கனவு. அடிக்கடி ஊடகங்களில் பாராளுமன்ற ஆசனங்களையே காணக்கிடைத்தன. அதையும் தாண்டி கலைநுட்ப்பங்களோடு சேர்ந்த பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி அது. உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட அலங்கார விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் அலுமினியத் தகட்டுகள், வெள்ளிக் கோலில் அமைக்கப்பட்ட வரலாற்றைப் பிரதிபலிக்கும் சின்னங்கள், அரியாசனமாய் வீற்றிருக்கும் அகிராசனம் எல்லாமே அரண்மனைக்குள் இருக்கும் கம்பீரமான உணர்வைத் தந்தன. இதிலும் சிறப்பு என்னவென்றால் மேலிருந்து பார்க்கும் போது நீரின் நடுவே பூத்திருக்கும் தாமரை மலர் போல காட்சி தருமாறு ஜப்பானியரால் வடிவமைக்கப்பட்டமை இலங்கைக்கே பெருமை சேர்க்கக்கூடியது. பாராளுமன்றத்தின் அவையிலேயே முதன்மை பெறுவது எது தெரியுமா? இங்கு வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கோளத்தில் கருங்காலி மரத்தாலான செங்கோல். இது மட்டும் இல்லையென்றால் அவை கூடமுடியாது. இவை யாவற்றையும் ஒரே நாளில் காணமுடிந்தமையும் விந்தை தான்.
முதல் நாள்ப்ப்பொழுது பாராளுமன்றத்தோடு கழிந்தாலும் மறுநாள் அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட பொருட்களும் தகவல்களும் வரலாற்றை மீட்டதோடு பலவற்றைக் கற்றும் தந்தது. இது மட்டுமல்ல, வெளியேயுள்ள பூங்காவில் நண்பர்களோடு ஒரு சில நொடிப் பொழுதுகள்.. மனதிற்கு இதமாயிருந்தது.
'ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் தொனிப் பொருளில் களனிப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது மருத்துவக்கண்காட்சி. இதுகூட ஒரு அரிய வாய்ப்புத்தான். ஏன்தெரியுமா? ஜந்து வருடங்களுக்கு ஒரு முறை தான் இக் கண்காட்சி இடம்பெறும். பல்லின மக்களோடும் சேர்ந்து எதார்த்தமான காட்சிகளைப் பார்த்தாலும் சில காட்சிகள் நெஞ்சை உருக்கியே போயின. சாதாரணமாக இறந்த உடல்களை பார்ப்பது இயல்பு தான். ஆனால் இங்கு உறுப்புக்கள் அகற்றிய நிலையில் பிளவுபட்டுக் காணப்பட்ட உடல் மனிதத்தையே புரிய வைத்தது. மறுநொடி ஏற்ப்படப்போகும் மரணத்தை எண்ணாது எத்தனை எத்தனையோ எண்ணங்களும் செயல்களும்....
இவற்றோடு சேர்ந்து விழுதுகளிலும் ஒரு நாள். புத்தகப்படிப்புக்களை செயற்பாடுகளாய் உரையாடினோம். சுதந்திரத்தின் நினைவான சுதந்திர சதுக்கத்தில் விமானப்படையினரோடு என் நண்பர்களுடன் நானும்.. புகைப்படக் கமராக்களும் புகைப்படத்திற்கு முகம் கொடுப்பவர்களும்..  இதற்குள் நானும் ஒருத்தி தான். எல்லாமே என் நண்பர்களுடன் இருந்த உணர்வு அல்ல. என் குடும்பத்தோடு மகிழ்வாடிய உணர்வு தான். . .
அன்று மாலை விகாரமகாதேவிப்பூங்கா.. நீண்டநேர மழை.... நண்பர்களோடு  Nescafe ஆனாலும் மழையின் குளிரைக் குறைக்கவேயில்லை. சாதாரணமாகப் புகைப்படம் எடுப்பது ஞாபகத்திற்காக. என் தோழிகளோடு புகைப்படங்கள் எடுத்ததே இதமான நினைவுகள்..
எம் போன்ற இதழியல் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம்.. பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில். தமிழ், சிங்களம், முஸ்லீம் என நட்பு வட்டத்தையே விசாலித்தது இது. பல புதிய இன்முகங்களோடு உறவாடிய நாட்கள் அவை. பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பிற்காய் பயன்படுத்தப்படும்Head set  ஜப் பார்வையிட்டிருந்தேன். ஆனாலும் பயன்படுத்தும் சந்தர்ப்பம் எட்டவில்லை. இது என்ன தெரியுமா? ஒரு மொழியில் உரையாற்றுவதை அதே வேகத்தில் இருமொழிகளில் மொழிபெயர்ப்பது.. எமக்கு விரும்பிய மொழியில் கேட்க்க முடியும். வேடிக்கை என்ன தெரியுமா? சிலர் தமிழில் உரையாற்றும் போதும் அணிந்திருந்தனர். நண்பர்களிடையேFlash news  எனப்பரிமாற்றிய இச் செய்தி .. இவை அனைத்துமே ஊடகப் பயணத்தில் பொன்னான மணித்துளிகள்..
எமக்குக் கிடைத்த வாய்ப்புக்களைப் பாருங்களேன். மதியம் அமைச்சருடன் கலந்துரையாடல்.. யார் தெரயுமா? கல்வி அமைச்சர் திஸ்ஸநாயக்கவுடன் தான்.. அப்பொழுது உணர்ந்தோம் எம் நிலையை. சந்தர்ப்பந்கள் எல்லாமே கிட்டிவிட்டது. சாதிக்கத் துடிக்கிறது வேகம்..
இரவுப்போசனம் புதிய நண்பர்ரோடு. தொலைக்காட்சி அறிவிப்பாளர் அனந்தபாலகிஸ்ணருடன். அவர் ஆசிரியராய் எம்மோடு இணைந்தாலும் சில நாட்களிலிலேயே நண்பராகிவிட்டார். சில காலப்பிரிவின் பின்னரான சந்திப்பு. மனதை நெகிழவைத்தது.
வானொலி,தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி கேட்ப்பது வழமை. ஆனால் அந்நிகழ்ச்சி செய்வதையே பார்த்தது புதுமை. மகாராஜா நிறுவன கலையகத்தில் பார்க்கக் கிடைத்ததுSpell master  நிகழ்ச்சி. நேரடியாக நாமும் இணைந்திருந்தோம். என்ன ஒரு பூரிப்பு. அடுத்துக் காத்திருந்தது இன்னுமோர் வியப்பு. தேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பார்த்த கஜமுகன் அண்ணா. நண்பர்களோடு சேர்ந்து அவருடன் ஒரு கலந்துரையாடல். அவரின் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது எம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. இங்கு பேசிக்கொண்ட நண்பர்களது சிரிப் பொலிகள் இப்போதும் அந்நாளை நினைவுபடுத்துகிறது.
ஊடகப் பயணத்தில் இன்னோர் அங்கீகாரத்தையும் என்னால் பெறமுடிந்தது.  தெற்க்காசியப் பெண் ஊடகவியலாளர் அமைப்பில் யாழில் இருந்து முதல் முதல் இணைந்து கொண்ட ஜந்து பெண்களில் நானும் ஒருத்தி என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
தூங்குவதற்கு நேரம் போதாமல்ப் போனாலும் மகிழ்ச்சிக்கு நேரம் குறையவேயில்லை. இதழியல்க் கல்லூரி நண்பர்களுடனான விளையாட்டு நிகழ்வு அவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை தந்தது. மழையைக் கூடப்பொருட்ப்படுத்தாது மைதானத்தில் நின்றுகொண்டிருந்தோம். விடைகொடுக்கும் போது ஈரமாகிய கண்கள் அன்பு நெஞ்சங்களைப் புரியவைத்தது.
 ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்திற்கு சென்ற அவ் இறுதிநாள் யாழ் வரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ்.பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



உதயன் பத்திரிகை ஆசிரியர்  ஞா.குகநாதன்  தாகக்கப்பட்டதை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று நண்பகல் 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 5 முக்கிய ஊடக இயக்கங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி இருவர் படுகாயம்

யாழ் நகரின் நாவக்குழிப் பாலத்திற்கு அருகில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்துடனேயே யாழ் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு மனுசி

நடிப்பதற்காக சந்தர்ப்பம் எடுத்துத்தருவதாக ஒரு பெண்ணுக்கு வாக்களித்த படப்பிடிப்பாளர் அப்பெண்ணை நடிக்க வைத்துவிடுகிறார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடிக்கவைத்தது திரையில் அல்ல. நியத்தில்... வறுமையின் கொடுமையால் பணத்தைப்பெறுவதற்காக தான் இதைச் செய்கிறார் படப்பிடிப்பாளர். சஞ்சிகை ஒன்றிற்கு அப்பெண்ணின் படம் வேண்டுமென படம் எடுத்து மனதைக்குளிரவைத்துவிட்டு கடனாகப் பணத்தை வாங்கிச்சென்றுவிடுகிறார். ஆனால் கடைஅ சழடட இல்லாத கமராவில் தன்னைப்படம் பிடித்ததை அறிந்தும் அவரின் வறுமையை உணர்ந்து காட்டிக்கொடுக்காது விட்டுவிடுகிறாள். ஆனாலும் அவள் மட்டும் பணக்காரி என்று எண்ணிவிடாதீர்கள். இவளும் வறுமையின் பிடுயில் சிக்கியவள் தான்.
இவ் எதார்த்தமான குறும்திரைப்படம் பிரபஞ்சனின் கதையில் பாலுமகேந்திராவரல் இயக்கப்பட்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முக்கோணக் காதல்

உண்மைக் காதல் என்றால் என்பதை கருவாகக் கொண்டு உருவாகிய குறும்படம் தான் முக்கோணக்காதல். கண்டதும் காதல் என்பது பொய் என உணரவைத்துள்ளார் இயக்குனர் பாலுமகேந்திரா. இது மட்டுமல்ல நிச்சயத்திருமணம் ஒரு வியாபாரம் என்றும் கூறுகிறார். பெண்களிடம் சீர்வரிசை வாங்கி தம் சகோதரிகளுக்கு சீர் கொடுக்கும் போலி உலகு இது. இதிலும் யாதகம் என்னும் முடக்கொள்கை இன்னும் உண்டு எனவும் ஆண்களுக்கு முயற்சி, கம்பீரம், பொறுப்பு, என்பன அவசியம் எனவும் கூறுகிறார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஊடகமும் மக்களும்

ஜனநாயக உலகில் மக்களிடையேயுள்ளதும் மக்கள் வெளிப்படுத்தும் தொடர்பு முறையே அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக்காட்டுகின்றது. சமுகநிலைஇ அரசியல்நிலை பொருளாதார நிலை என்பவற்றையுட்படுத்தி பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள்,சினிமா, இணையம் போன்றன செயற்படுகின்றன.
இவ்வூடகங்களோடு ஒவ்வொரு தனிமனிமனிதனும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கின்றான். கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் உலகின் போக்கிற்கு இவை மக்களை ஈர்த்துச் செல்கின்றன. இவற்றோடு இணைந்திருப்பதன் காரணமாக அறிந்தோ அறியாமலோ அவற்றோடு இசைவாகிக் கொள்கின்றோம். இதனால் அனேகமானவர்களின் வாழ்க்கைப்பயணத்தில் ஊடகம் தாக்கத்தை ஏற்படுத்திக் கெண்டேயிருக்கின்றது.
பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதால் மக்களிடையே ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனாலும் பாதங்களும் ஏற்படாது விடவில்லை. தனியேயுள்ள மனிதனையும் உலகோடு தொடர்புபடுத்தி விடுகிறது இணையம். இது பல்லூடகங்களையும் உட்படுத்தியுள்ளது. இத் தனித்துவமான ஊடகவியல்தான் 'தொடரறா ஊடகவியல்' எனப்படுகிறது. தொடர்பாடல் துறையில் பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய இணையம் ஊடகவியலின் பல வடிவங்களையும் ஒன்றாக இணைத்துவிட்டது. வேறொருவர் வெளியிடும் கருத்துக்களை பார்ப்பவர்களாக இருந்த பொதுமக்கள் இதன்முலம் செய்திகளை வெளியிடுபவராக மாறியுள்ளனர். எடுத்துக்காட்டாக 2004 டிசம்பரில் இலங்கையை சுனாமி தாக்கிய போது தம்மிடங்களில் நடக்கும் சம்பவங்களையும் படங்களையும் ஒலிப்பதிவுகளையும் திரட்டி அனுப்பியிருந்தனர். இதற்கும் மேலாக குறும்படங்கள்இ இசை வெளியீடுகள் போன்றனவும் அதிகரித்துள்ளன. வலைப்பூக்களின் பாவனையால் கட்டுரைகள் இ கவிதைகள் எழுதுபவர்களும் வாசகர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அனேகமானவர்களுக்கு வேலைப்பழு காரணமாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் ஏனையவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சமுக வலைத்தளங்களின் வருகை முலம் இந்நிலை மாறியுள்ளது. மாறாக இதன் பாவனையால் தற்கொலை இளம்வயதுக்காதல்; போன்றன ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றமை கவலைக்குரியதாகவேயுள்ளது.
மக்களை வெகுவாக சென்றடைந்துவிடும் ஊடகம் தான் தொலைக்காட்சி. அனேகமான தொலைக்காட்சிகள் தொடர்நாடங்களை மையப்படுத்தியே அமைகின்றன. அண்மைக்காலமாக சிறந்த நட்பை இளமைக்காலத்திலிருந்து எடுத்துக்காட்டும் 'சிந்து பைரவி' எனும் தொலைக்காட்சி நாடகம் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் இவை உறவுகளிடையே ஏற்ப்படும் பிணக்குகளையும் பழிவாங்கும் உணர்வுகளையும் விசாலித்துக் காட்டிவிடுகின்றன. இவை சமுகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகின்றன.
இலத்திரனியல் ஊடகத்தின் ஆரம்பமாய் உருவாகிய வானொலி மக்களது தொடர்புசாதனத்தில் முதன்மை பெறுகிறது. வானொலிகளில் நிகழ்த்தப்படும் போட்டிநிகழ்சிகள் மக்களைக் கவர்ந்துவிடுகிறது. 'ஒரு நிமிடம் பேசு ஒரு லட்சம் காசு' போன்ற நிகழ்ச்சிகள் சுவாரசியத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்ப்படுத்துகின்றது. தம் குரலிலேயே சொந்தக் கவிதைகளைப்படைக்க வழி சமைக்கின்றன 'கவிராத்திரி' போன்ற வானலை நிகழ்சிகள். இவை மக்களின் படைப்பாற்றலை வளர்க்கின்றன.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டியிழுத்து வைத்திருக்கின்றது சினிமா. நியத்தில் பெறமுடியாத எண்ணங்களையும் கற்ப்பனைகளையும் நம் கண்முன் காட்டிவிடுவதால் இவற்றின் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுகின்றோம். பல அத்தமுள்ள திரைப்படங்கள் சமுகத்திடையே பல்வேறு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. அவ்வகையில் அப்பாஇ பிள்ளை உறவை அழகாகக் காட்டும் படம் தான் 'அபியும் நானும்'. இப்படத்தினைப்பார்த்து தம்மை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். பெரிய பெரிய கடைகளில் வேலைக்காய் செல்பவர்கள் முதலாளிகளால் நடத்தப்படும் விதத்தை முழுமையாய் எடுத்துக்காட்டிய படம் தான் 'அங்காடித்தெரு'. இதன் பிறகு தான் அனேகமானவரை இப்பிரச்சனை சென்றடைந்தது. ஆனாலும் சமுகத்தைத்தீயவழியிலும் செலுத்த மறுக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இளம் வயதுத்திருமணம்இ இளம் வயதுக்கற்ப்பம்,கொலைஇ கொள்ளைஇ கொஸ்ரி மோதல்களஇ; விவாகரத்துஇ கலாச்சார சீர்கேடு இவையாவும் சினிமாவின் தாக்கம் தான். சில படங்கள் எதார்த்தத்தைத் தந்த போதும் அனேகமான தமிழ் சினிமா மக்களைத்தவறான பாதைக்கேயிடுட்டுச்செல்கின்றது.
மக்கள் ஊடகங்களின் ஆரம்ப கட்டமாய் உருவாகிய செய்திப்பத்திரிகைகள் பல்வேறு வகையான ஊடகங்கள் உருவாகிய போதிலும் சமுகத்தின் வளர்ச்சிப்போக்கில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியதால் தான் இன்றும் நிலைத்துநிற்கின்றன. காலையில் பத்திரிகை பார்க்காதிருப்பவர்கள் மிகக்குறைவு. பாமர மக்களும் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளக்கூடியதாய் அனைவரையும் இவை சென்றடைகின்றன. இந்தபோதும் பத்திரிகைகள் பக்கச் சார்பாய்த் தொழிற்ப்படுவதால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றன.
மக்களின் ஒவ்வொரு அசைவிலும் பங்கு கொள்ளும் ஊடகம் சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுமாயின் உலகின் வெற்றிப்பாதையை இலகுவில் அடையமுடியும்.
                      

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை

யாழ். பல்கலைக்கழகத்தில் 29.07.2011 அன்று தழிழ்அறிஞர் பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப்பேருரை இடம்பெற்றது. இதில் பல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பேராசிரியர் விசாகருபனின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம்இ ஆறு திருமுருகன் இ கலைப்பீடாதிபதி ஞானகுமரன்இ வணிகப்பிடாதிபதி தேவராஜாஇ பேராசிரியர் சிவலிங்கராஜாஇ பேராசிரியர் அ.சண்முகதாஸ் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர் லலீசன் மற்றும் கவிஞர் சோ பத்மதமாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

aho;. gy;fiyf;fofj;jpy; 29.07.2011 md;W jopo;mwpQu; Nguhrpupau; rptj;jk;gpapd; epidTg;NgUiu ,lk;ngw;wJ. ,jpy; gy Jiw rhu;e;jtu;fSk; fye;J nfhz;ldu;. ,e;epfo;T Nguhrpupau; tprhfUgdpd; jiyikapy; ,lk;ngw;wJ. ,e;epfo;tpy; aho;. gy;fiyf;fofj; JizNte;ju; tre;jp mupaul;zk;, MW jpUKUfd; , fiyg;gPlhjpgjp QhdFkud;, tzpfg;gplhjpgjp Njtuh[h, Nguhrpupau; rptypq;fuh[h, Nguhrpupau; m.rz;Kfjh]; Nfhg;gha; Mrpupau; gapw;rpf;fyhrhiy tpupTiuahsu; yyPrd; kw;Wk; ftpQu; Nrh gj;kjkhjd; Nghd;Nwhu; fye;Jnfhz;ldu;.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பதக்கங்களை வென்றெடுத்தனர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்  மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றிய இப்போட்டிகள் கடந்த 23.07.2011 அன்று ஜிம்றாசியம் மண்டபத்தில் இடம்பெற்றன. இதில் யாழ் பல்கலைக்கழகம் 1 தங்கப்பதக்கம் 2 வெள்ளிப்பதக்கங்கள் 1 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. இரண்டாம் வருட மாணவன் கஜேந்திரன் தங்கப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் இராஜ்குமார் மற்றும் இறுதி வருட மாணவன் ஜெயராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாம் வருட மாணவன் நவநீதன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக மட்டத்தில் யாழ். பல்கலைக்கழகம் ஜந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.  இப்போட்டியில் முதல் முறையாக மாணவி ஒருவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறைக்கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது

யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடமும் வகுப்பறை கட்டடமும் கடந்த புதன் கிழமை (20.07.2011)அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் கௌரவ ரோகன திசநாயக்க கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் தீவாக கல்விப்பணிப்பாளர் v.ராதாகிருஷ்ணன்,கோட்டக்கல்விப்
பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2.JPG

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கிடையான மெய்வல்லுனர் போட்டி அண்மையில் வவுனியா கல்வியற்கல்லுரியில்  இடம்பெற்றது. இதில் யாழ்.எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவர்கள் இரு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் 11 வயதுப்பிரிவு நீளம் பாய்தலில் ஜே.ஜெனிற்றா தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரன்கனைக்குரிய கேடயத்தையும் பெற்றுக் கொண்டார். 15 வயதுப்பிரிவு நீளம் பைதலில் ந.தர்சிகா வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். 17 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் க.தனுயன் தங்கப்பதக்கத்தையும் சிறந்த மைதான வீரனுக்குரிய கேடயத்தையும் பற்றுக் கொண்டார். 19 வயதுப் பிரிவு அரை மரதன் போட்டியில் ஜே.மறிய கொறற்றி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பாடசாலை அதிபர் ச. கமலதீபனையும் படம் காட்டுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாம்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 19.07.2011 அன்று தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரிää சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிää மானிப்பாய் மகளீர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இடம்பெற்றது.
பாம்புகள் பற்றிய தவறான  எண்ணத்தினை கொண்டுள்ளதால் பாம்புகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சூழல்  சமநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. இது தொடர்பான  விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக தெகிவளை தேசிய பூங்காவின் பிரதிப்பணிப்பாளர் ரேணுகா பண்டார நாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்டது. இக் கருத்தரங்கிற்கு தரம் 08க்கு மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் . இதன் போது விசப்பாம்புகளும்ää விசமற்ற பாம்புகளும் தெகிவளையிலிருந்து கொண்டுவரப்பட்டது.
பாம்பின் மீதுள்ள பயத்தினை போக்குவதற்காக விசமற்ற பாம்புகளை மாணவர்கள் கையிலே கொடுத்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் பாம்பினை கைகளிலே வைத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
எதிர்காலத்தில் பாம்புகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என விஞ்ஞான உதவிக்கல்விப் பணிப்பாளர் விஜேந்திர சர்மா தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெல்லிப்பளையில் பாடசாலைகள் மீள்புனரமைப்பு

தெல்லிப்பளை பகுதியில் 6 பாடசாலைகள் மீளப்புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா  இன்று காலை இடம்பெற்றது.  இத்திட்டத்திற்காக 32.35 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் R.ராஜேந்திரன் தெரிவித்தார். வீமன் காமன் மகாவித்தியாலயத்திற்காக 10 மில்லியன் நிதியும் வலிகாமம் தொண்டர் ரோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் மாவிட்டபுரம் தெற்கு அமெரிக்க மிசன் பாடசாலைக்காக 2.5 மில்லியன் நிதியும் கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாலயத்திற்காக 4.8 மில்லியன் நிதியும் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்திற்காக 10.05 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெல்லிப்பளை வைத்தியசாலை மீள்புனரமைப்பு

 தெல்லிப்பளை வைத்தியசாலையில் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவகற்றல் தொகுதிகளின் திருத்த வேலைகளுக்கான ஆரம்பவிழா இன்று மதியம் 1.30 க்கு இடம்பெற்றது. இவ்விழாவை ரோகித அபய குணவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.  இச்செயற்றிட்டம் நிக்கொட்டினின் உதவியுடன் இடம்பெற்றது. கட்டட நிர்மானத்திற்காக 10345944 ரூபாவும் நீர்ப்பாசனத்திட்டத்திற்காக 8223622 ரூபா நிதியும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என Dr. ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 4 மாத காலத்திற்குள் இப்பணிகள் யாவும் முடிவடைந்துவிடும் என கூறினார்.  இதுவரை காலமும் O.P.T இயங்கிய போதும் குடிநீர்த்தொகுதி மற்றும் கழிவகற்றல் தொகுதி சீராக இல்லாததால் விடுதி இங்கு இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ் நீதிமன்றம்  கட்டடத்தொகுதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிதைவடைந்த நிலையிலுள்ள பூங்கா

யாழ்ப்பாணத்தில் நல்லுர்ப்பிரதேசத்தில் முத்திரைச்சந்தியில் இப்பூங்கா  அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பிரபல்யமானதாக காணப்பட்ட  இப்பூங்கா தற்போது சிதைவடைந்த நிலையிலுள்ளது.  இதனை மீளக்கட்டும் நடவடிக்கைகள் எதுவும்  ஆரம்பிக்கப்படவில்லை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புகைப்பட இதழியல் கற்கைநெறியின் ஆரம்பகட்டமாக எனது தேடலில் யாழ் நகரின் சில காட்சிகள்..




புத்துயிர் பெற்ற நிலையில் யாழ். நூல் நிலையம்  
 
 
யாழ்  நகரின்  மத்தியில் பொது நூலகம் அமைந்துள்ளது.  இதன் கட்டுமானப்பணிகள் 1933  இலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டடம் 1959  ம் ஆண்டு  திறந்துவைக்கப்பட்டு  1960 ல் முழுதாக கட்டி முடிக்கப்பட்டது.  இது '' மோகிள்'' வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  சிலரது தனிப்பட்ட நூல்களின் சேகரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நூலகம் 1981  ல் எரியூட்டும் வரை கிட்டத்தட்ட 97000 நூல்கள் காணப்பட்டன. மே மாதம் 31  ம் திகதி சில விசமிகளால் இது எரியூட்டப்பட்டது.  பின்னர்  2003  ம்  ஆண்டு மாசி  மாதம் 30000 நூல்களுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இங்கு தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள்  வந்து செல்கின்றனர். இங்கு பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுவதால் அன்னியசெலவானியும் அதிகரிக்கின்றது.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS