Vizhi short film

https://www.youtube.com/watch?v=dG00-YnossM


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆளுமையில் விருத்தி தந்த நாடக பயிற்சி பட்டறை



ஒரு அதிஸ்டம் என்றே சொல்லலாம். செயற்திறன் நாடக அரங்கு மூலம் கொழும்பில் இடம்பெறும் பயிற்சி பட்டறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மன் நாட்டின் உதவியுடன் புழுநுவுர்நு நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. நான் பங்கு பெறும் முதல் பயிற்சி பட்டறை இது. ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன் பத்து பேர் கொண்ட குழுவாக நண்பர்கள் கூட்டம் சென்றிருந்தோம். எமக்கு தலைமையாக செயற்திறன் நாடக அரங்க இணைப்பாளர்திரு தேவானந் அவர்கள் வந்திருந்தார்.


அதற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்து கலைஞர்கள் வந்திருந்தனர். பெரும்பாலானோர் சகோதர மொழியை சேர்ந்தவர்கள். பார்த்த மறுகணமே அனைவரும் நண்பர்களாகிவிட்டோம். அங்கு இடம்பெற்ற உரையாடல்கள் சலி;ப்பை தந்தாலும் செயன்முறைகளில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டோம். ஏனையோரின் மனநிலையும் இதுவாக தான் இருந்தது.
இன்றய அவசரமான உலகில் நேரம் என்பதை விலை கொடுத்தாவது வாங்க முடியாதா என தவிக்கின்றனர் பலர். அதற்குள் நானும் ஒருத்தி தான். இந் நிலையில் இரண்டு நாட்களும் எமக்கு கிடைத்த பொன்னான நாட்கள். எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய மாய உலகிற்குள் வாழ்ந்த நாட்கள் அவை.

அதிகமாக அரங்க விளையாட்டுகளில் தான் ஈடுபட்டிருந்தோம். இதன் மூலம் எமது தொடர்பாடலும் விரிவடைந்தது. கோழி கொட்டான்இ ஆடும் வீடும்இ சங்கிலி புங்கிலி போன்ற எமது விளையாட்டுக்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து சேர்ந்து விளையாடினோம். அதே போல் அவர்களது விளையாட்டுக்களையும் எம்மோடு கூடி விளையாடினார்கள். சக்தி பரிமாற்றம்இ வனி வனி போன்ற விளையாட்டுக்களை நாம் அவர்களிடம் கற்றுக்கொண்டோம். இவ் விளையாட்டுக்கள் எமது ஆளுமையில் விருத்தியை தந்தது. அதை விட் எமது ஆர்வத்தையும் வேகத்தையும் தூண்டியது. நாம் அனைவரும் இனம்இ மதம் வேறுபாடின்றி துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாவும் செயற்பட்டோம்.
இது தவிர சில நடனக்கலைகளையும் கற்றுக் கொண்டோம். தூண்டல்களுக்கேற்ப துலங்கல்களை ஒரு கலையாகவே வெளிப்படுத்தினோம்.

சற்று வித்தியாசமாக சுவரிலுள்ள சிற்பங்கள் போல நாமும் எம்மை பாவனை செய்து மற்றவர்களோடு தாங்கிக்கொண்டு ஒவ்வொருவர் தோழிலும் ஒவ்வொருவர் ஏறி பிரமிட் போல ஒரு வடிவை ஏற்படுத்தி கொண்டோம். அவ்வாறே மகிழ்ச்சிஇ கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தினோம். வித்தியாசமான அனுபவம் அது. எமது கற்பனை திறனுக்கும் வழி சமைத்து தந்திருந்தனர். ஒருவர் சிற்பி போலவும் மற்றவரை கிளே போலவும் பாவித்து மற்றவரை சிற்பமாக செய்ய வேண்டும். எமது ஆற்றலுக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப பல சிற்பங்களை செய்தோம். எம்மையும் கிளேயாக பாவித்துக் கொண்டனர் ஏனையோர்.
இது போன்ற பயிற்சி பட்டறைகள் எமது ஆளுமையை விருத்தியடைய செய்யும் என்பதால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறந்த ஒன்று.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உலக ஓட்டத்தில் மாறுபடும் கலாசாரம்...


இப் பரந்துபட்ட உலகில் கோடான கோடி மனிதர்கள்  வெவ்வேறு தேவைகளுடனும் ஆசைகளுடனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப் பூமியில் பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு தேடலில் தன் பயணத்தை இறக்கும் வரை மனிதன் நகர்த்திக்கொண்டிருக்கிறான். இப்பிரபஞ்சத்தில் பூகோள அமைவிற்கேற்ப வௌ;வேறு பிரதேசங்களிலும் வேறுபட்ட மனித இனங்கள் வாழ்க்கை நடத்துகின்றன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் தேடல்களுக்கும் ஏற்ப்ப அவனின் வாழ்வியலும் மாறுபட்டது. வாழ்வியல் என்பது கலை,கலாசாரம்,சமுகம்,பண்பாடு என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.


கலாசாரம் என்ற போர்வை ஒவ்வொரு சமுகத்திற்கும் போர்த்ப்பட்டுள்ளது. வேறு உயிர்கள் போன்று மனிதனும் வாழ்க்கை நடத்தவில்லை. அவற்றிடமிருந்து மட்டுமல்ல வேறு மனிதர்களிடமிருந்தும் தாம் வாழும் இடத்திற்கேற்ப கலாசாரத்தை கொண்டுள்ளான். கலாசாரம் என்பது உணவு, உடைஇ உறையுள், கலை,சமயம, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கலாசார சீர்கேடு ஆணும் பெண்ணும் காதல் செய்கின்றனர். திருமணமான பெண்கள் வீட்டிற்குள்ளே இருப்பதில்லை. இளைஞர்கள் சமுக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.
உலக ஓட்டத்திற்கு ஏற்ப்ப வாழ்வியலை மாற்றுவது கலாசார சீர்கேடா? கிணற்று தவளையாய் இருந்த சமுகம் உலகோடு ஒத்து இயங்க எத்தணிப்பது கலாசார சீர்கேடா? தற்கால பெண்கள் சேலை கட்டுவதில்லை. என்பதும் இவர்கள் கருத்து. ஆடைக்குள்ளா இருக்கிறது கலாசாரம் ? அடுப்பு ஊதும் பெண்களை அரியணையில் பார்ப்பது பொறுக்குதில்லை இவ் வீண்பேச்சு பேசுபவர்களுக்கு ..

கலாசாரம் என்பது மாறுபட்டு கொண்டிருப்பது தான். ஆதி மனிதன்; ஆடையின்றி தான் இருந்தான். பின்பு மானத்தை காப்பதற்காக இலை குழைகளை அணிந்தான். பின்பு தான் ஆடை அணிய ஆரம்பித்தான். வாழ்வியல் வளர்ச்சியில் கலாசாரமும் மாற்த்திற்கு உள்ளாகிறது.
சேலை கட்டிய பெண்கள் சுடிதார் அணிவதை ஏற்றுக்கொண்ட சமுகம் ஜீன்ஸ் போடுவதை கண்டிக்கிறது. பெண்களை சேலை கட்ட எத்தணிப்பவர்கள் அதிகம் ஆண்கள் தான். இவர்களே மேலைத்தேய நாகரீகத்தில் அணிவது ரெனிம் ஜீன்ஸ் அதுவும் இறுக்கமாக இறக்கமாக.. சினிமாவில் வரும் நாயகர்கள் போல பாவனை செய்து தாம் மட்டும் உடுத்திக்கொள்கிறார்கள். பெண்களை மட்டும் பாலியல் ரீதியில் சித்தரிக்கின்றனர். சேலையை விட கவர்சி உடை வேறு ஏது? அதுமட்டுமன்றி சேலையில் பெண்கள் பொம்மைகளாக தான் இருக்க முடியும். இலட்சியப்பாதையில் பயணிப்பதற்கு ஆடை முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. இதில் ஆணாதீக்கமும் தலையோங்கத் தான் செய்கிறது.

காதல் கொள்வதும் மணமுடிப்பதும் இன்றுதான் நடக்கிறதா? விபச்சாரம் உட்பட பல சீர்கேடுகளும் தாத்தா, பாட்டி காலத்திலேயே இங்கு நடந்தது தான். புதிதாக ஒன்றும் முளைத்துவிடவில்லை.
முன்னய காலங்களில் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான தூரம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறு அல்ல. உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்டது. சமுக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு ஊடகங்களுக்கும் மக்களுக்குமான வெகுவான ஒன்றிப்பு என்பவற்றின் ஆதீக்கத்தால் செய்திகளும் சம்பவங்களும் மறுகணமே பதிவாகிவிடுகின்றன.
மனிதன் வாழ்வாங்கு வாழ்வதில் அவனின் கலாசாரமும் பங்கு கொள்கிறது. ஆனால் இவற்றை சின்னத்தனமாக சித்தரிக்காது முற்போக்கான சிந்தனையுடன் வரவேற்பது சிறந்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றங்களை உள்வாங்கி வாழப்பழகி கொள்வது ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்.
' உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் 
கல்லாதார் அறிவிலார்'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சென்னை மாநகரின் கரும்புள்ளி கூவையாற்றைச் சூழ உள்ள குப்பம்

பொருளாதாரம், கல்வி, தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது சென்னை மாநகரம். எண்ணற்ற கட்டடங்கள்,கோயில்கள், பல்கலைக்கழகங்கள், கடற்கரைகள் என எல்லாவற்றையும் உட்கொண்டது. அத்தோடு சுற்றுலாத்தலங்களைம் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இச்சிங்கார சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். .  
சுமார் ஜம்பது வருடங்களிற்கு முன்பு மக்கள் பயன்பாட்டில் தூய்மையாய் இருந்தது கூவையாறு. ஆனால் தற்போது இது சென்னையின் கழிவுகளை தாங்கும் சாக்கடையாக மாறியுள்ளது. இவ் ஆற்றின் இரு புறத்திலும் நீண்டு பரந்து காணப்படும் சேரிகள்தான் சென்னையிலுள்ள கரும் புள்ளி.
இச்சேரிகளில் ஒன்று தான் நெடுங்செழியன் நகர். சுமார் ஜம்பதாயிரம் குடும்பங்கள் ஏழாயிரம் மாணவர்கள் இங்கு வசிக்கின்றனர். ஒரே நாளில் துன்பப்பட்டு இறப்பவர்கள் ஒரு வகை. தினம் தினம் துன்பப்பட்டு இறப்பவர்கள் இன்னொரு வகை. ஆனாலும் இங்கும் மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
பிரதான வீதியிலேயே குப்பைகள் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்,  குப்பைகளும் கழிவு நீரும் நிரம்பிய தெருக்கள், அணிதிரண்டிருக்கும் இலையான்கள், சிதைவடைந்ததும் விளம்பர சீலைகளை கூரையாக கொண்டதுமான சிறிய சிறிய வீடுகள். ஆடையின்றிய அழுக்கான சிறுவர்கள்,  அக் கழிவு நீர் வழிந்தோடும் தெருக்களிலும் ஆடைகளை துவைப்பவர்கள்.  சமையல் செய்து இத் துர்நாற்றத்திலும் உண்கின்றனர். கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் பள்ளி செல்லாது தெருக்களில் விளையாடுகின்றனர். மீறிப் பாடசாலை செல்பவர்களும் அங்கு சென்று கல்வி கற்கவில்லை. ஆண்களும் பெண்களும் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு சமுதாய சீர்ழிவுகளிற்கும் தணைபோகின்றனர். படிப்பறிவு, சுகாதாரம் என அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்கள். சுத்தம் என்னும் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத சமூகம் தான் இது.
இவ்வாறு கூவையாற்றை சுற்றி குப்பத்தில் இருப்பவர்கள் யார்? அத்துமீறிக் குடியேறி அரசிடம் சகல சலுகைகளையும் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். சென்னை மாநகரம் என்பதால் இவ்விடத்தையும் விட்டுச் செல்வதாக இல்லை அவர்கள். பழியை அரசு மீது போட்டு விட்டு தம் நிலையை உணராது தம் வாழ்வைத் தாமே அழிக்கும் நியாயமற்ற மனிதர்கள் தான் இவர்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பொறுப்பற்ற ஆண்கள்.. பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களை அனுப்பாத பெற்றோர்கள்.. இவற்றோடு அடிப்படை வசதிகளே அற்றவர்கள்.

இங்கு அதிகமான பெண்கள் விபரீதமானதோர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆட்டுக்காலை வெப்பப்படுத்தி உணவு விடுதிகளிற்கு அனுப்புகின்றனர். இதன் தயாரிப்பு சுகாதார சீர்கேடுடனேயே நடைபெறுகிறது.  இலையான்கள் , விலங்கு கழிவுகள் , கழிவு நீர்; , சலவைநீர் நிறைந்த நடைபாதையிலேயே ஆட்டுக்கால்களை காய விடுகின்றனர்.

இங்கிருந்து அனுப்பப்படும் ஆட்டுக்காலையே பெரிய உணவு விடுதிகளில் பாயா தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் வருமானத்தையும் ஈட்டிக்கொள்கின்றனர்.
தலைமுறை தலைமுறையாக இங்கு வாழும் இச்சமூகத்தை சேர்ந்த துர்க்கா என்பவர் தனது வாதமாக ‘ பெரிய மாடியில இருந்து வாற கழிவு தண்ணி எங்க வீட்டுக்கு முன்னால தேங்குது. இதால எங்க பிள்ளைங்களுக்கு நோய். இந்த நாற்றத்தில தான் நாம சமைச்சு சாப்பிடனும். இந்த கழிவு தண்ணில இருக்கிற கிருமிகளால தொற்று நோயும் வருது. அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கிமாரி இல்லை. தேர்தல் காலங்கள்ல மட்டும் இங்க வருவாங்க.’ எனக் கூறினார்.
ஆனாலும் இவர்களை வறியவர்கள் என ஒத்துக்கொள்ள முடியாது. ஆண்களோடு சேர்ந்து பெண்களும் சம்பாதிக்கின்றனர். மோட்டார் , சயிக்கிள் , தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, தங்க நகைகள் என எல்லாமே இவர்களிடம் உண்டு.
தீர்வு இல்லாத எதுவும் இல்லை. மனிதனால் முடியாததும் இல்லை. தாமே தம் தலையில் மண்ணை வாரி போடுவதை யாரால் தடுக்க முடியும். தாம் இயல்பாகவும் மற்றவர்களைப் போலவும் வாழ்வதற்கு தாமே உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உலக நீரிழிவு நோய் தினம்



உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் மாதம் 14ம் திகதி அனுஸ்ரிக்கப்படுகிறது. சாள்ஸ் பெஸட் உடன் இணைந்து புpரட்டிக் பான்ரிங் இன்சுலினைக் கண்டறிந்தனர். இத் தினத்தை நினைவு கோரும் முகமாக புpரட்டிக் பான்ரிங்கின் பிறந்த தினத்தில் உலக நீரிழிவு நோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலக நீரிழிவு நோய் தினம் நீரிழிவு நோய் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வை மையப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் எனப்படுவது இன்சுலின் ஓமோன் உற்பத்தி குறைவடைவதால் இன்சுலின்  ஓமோனுக்கான தடை அதிகரிப்பதால் உடலில் இன்சுலின் ஓமோன் செயற்படுவதற்கான ஆற்றல் குறைவடைகிறது. இக் குறைபாடானது நீரிழிவு நோய் எனப்படுகிறது;.

குருதியில் அதிக வெல்லநிலை உடல் உறுப்புக்களைச் சிதைவடையச் செய்வதால் உயிர் அச்சுறுத்தும் சிக்கல்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கும். இதனால் இந்நோய் அமைதியான கொலையாளி எனவும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் வேறு பாதிப்புக்களிற்கும் உள்ளாகின்றனர். நீரிழிவுநோயாளிகளில் 20மூ ஆனோர் சிறுநீரக நோயாலும் ஒவ்வொரு வருடமும் 2.5 மில்லியன் நோயாளிகள் பார்வைக் குறைபாட்டிற்கும்  ஆளாகின்றனர். அத்தோடு வருடாந்தம் 1 மில்லியன் நோயாளிகள் அபயவங்களை இழக்கின்றனர்.

தாக்கம் நகர்ப் புறத்தில் 16.4 வீதமாகவும் கிராமப் புறத்தில் 8.7 வீதமாகவும் காணப்படுகிறது. அத்தோடு நாள் ஒன்றுக்கு 100 நபர் இருதய மற்றும் நீரிழிவு நோயால் இறக்கின்றனர்.

வயது,பால் வேறுபாடின்றித் தாக்கும் இந்நோய் விரைவான நகர மயமாக்கல்,ஆரோக்கியமற்ற வாழ்கை முறை, மன அழுத்தம், அதிக உடல் நிறை, புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் விரைவில் பரவிவருகிறது.
பரிகாரம் இல்லாத இந்நோயிடமிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி உருவாகமுன் தடுப்பது தான். இந் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறையில் கவனம் எடுக்க வேண்டியது கட்டாயம்.  மரக்கறி, பழவகை, மீன், கோழி இறைச்சி, கடலை பயறு, உழுந்து, குரக்கன், சிவப்பரிசி, ஆட்டாமா இவற்றை உட்கொள்வதோடு வீட்டில் சமைத்த உணவை உண்பது கட்டாயமானதொன்று.
சீனி, சக்கரை, தேன், வெல்லப்பாகு, கோதுமை மா அடங்கிய உணவு அரிசி மா அடங்கிய உணவு கொழுப்பு அடங்கிய உணவு என்பன உட்கொள்வதை தவிர்ப்பது அவசியம்.
மனஅழுத்தம் காரணமாகவும் இந்நோய் ஏற்படுவதால் இதற்கான தீர்வையும் பெற்றுக் கொள்வது அவசியம். பிரச்சனையை உறவினருடனோ அல்லது நண்பருடனோ பகிர்ந்து கொள்ளல் யோகாசனத்தில் ஈடுபடல் அத்தோடு முக்கியமானது எப்போதும் மகிழ்ச்சியாக இருத்தல் போன்றன மூலம் நீரிழிவு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

''தண்ணீர்'' குறும்படம்

                        

AAA மூவீஸ் வழங்கிய 2011 ம் ஆண்டிற்க்கான சிறந்த குறும்படத்திற்க்கான விருதை தட்டிச்சென்றது ''தண்ணீர்'' குறும்படம்.  இத்தோடு சிறந்த இயக்குனர், சிறந்த பாடல், சிறந்த குழந்தை நட்சத்திரம் என அடுத்தடுத்து விருதுகளைக் குவித்த பெருமையும் இதற்க்குத் தான். 

யுத்தம், வறுமை, காதல் எனப் பல்வேறு கோணங்களைக் குறும்படங்கள் பிரதிபலித்தாலும், ஏற்ப்பட்டதும் ஏற்ப்படப் போவதுமான ஓர் பிரச்சனை. .  இழந்ததும் இழக்கப்போவதுமான ஓர் துன்பம்... இவற்றை உயிரோட்டத்தோடு இணைந்து உணரவைத்துள்ளது ''தண்ணீர்'' குறும்படம்.

எந்தப் படைப்பு மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறதோ அது தனக்கான இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும். தண்ணீர் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் இது தண்ணீரின் ஏக்கத்தை பதிவுசெய்துள்ளது. இரு இளம் சிறார்கள் முலம் எதார்த்தத்தோடு கூடிய உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்கெண்ட கதையை விளக்க முகிலனுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை. வார்த்தைக்கு தடைபோட்டுவிட்டு இசையினாலேயே கருவை நிலையிருத்தியிருக்கிறது கதை. வெறுமனே சுவைக்காக எழுதப்பட்ட கதையின்றி நிஜத்தினையும் நியாயப்படுத்தியுள்ளது. நீரின் தேவை அவசியம் எல்லோரும் அறிந்ததே.  இருந்தாலும் இன்னமும் வீண்விரயங்களை நிறுத்தவில்லை இம் மக்கள். தண்ணீர்ப் பிரச்சனை எங்கோ தொலைவிலே இல்லை. எமக்கே ஏற்ப்பட்டுவிட்டது. போரால் பட்ட கொடுமைகள் ஓய்ந்து போக உலகே எதிர்நோக்கப்போகும் பாரிய சவால் தான் ''தண்ணீர்ப் பிரச்சனை''.இனியாவது நீரின் பெறுமதியை உணருங்கள் எனநெஞ்சங்களில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது இப்படம் . 
படைப்பாளிகள் எதிர்காலத்திற்கு வழிசொல்லுபவர்கள். முகிலனும் அதையே செய்திருக்கிறார். ஆரோக்கியமான விடயம். கோடிக் கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் விளம்பரங்களை விட சில நிமிடங்களிலேயே தண்ணீரின் ஏக்கத்தை கண்முன்னே காட்சிப்பபடுத்தியுள்ளார் இயக்குனர். 
இது போன்ற களம் படைப்பாளி செழுமை பெற வழிவமைத்துவிடும். சகோதரியின் தாகத்தை தீர்க்க போராடும் சிறுவன்.. சிறார்களின் பக்குவத்தைக் காட்டியுள்ளது. காட்சிகளைக் கச்சிதமாய் மனனப்படுத்த இசை தன் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறது. சிறுவனின் அடுத்தடுத்த துடிப்பு தான் இவ்இசை. படம் நடுவே வரும் பாடல்.. “ காய்ந்து போன தேசத்தில் ”.. கதையைப் பூரணப்படுத்தியுள்ளது. உணர்வுகளைக் கொந்தளிக்கவும் வைத்துள்ளது. வரண்டு போன தேசத்தில் நீர் இல்லை. மழை இல்லை.  விவசாயம் இல்லை. என அத்தனையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாடகத் தன்மைகளை இன்னும் தாண்டாத இந்தியப் படங்களுக்கு மத்தியில் புறவாழ்க்கையின் புரிதல் இத் தண்ணீரில் இருக்கிறது. வாழ்வியலோடு கூடிய இது போன்ற படங்கள் வரவேற்க்கத் தக்கவை. பாராட்டிற்க்கு உரியவை.
                                  
                                                                                                                 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முதியோர் இல்லம்

இது மனிதக் காட்சி சாலை . .
பால் குடித்த மிருகங்கள் அடிக்கடி
வந்து பார்த்துச் செல்கின்றன.

                     

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS