பாம்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு 19.07.2011 அன்று தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரிää சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிää மானிப்பாய் மகளீர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இடம்பெற்றது.
பாம்புகள் பற்றிய தவறான  எண்ணத்தினை கொண்டுள்ளதால் பாம்புகள் அதிகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சூழல்  சமநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. இது தொடர்பான  விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக தெகிவளை தேசிய பூங்காவின் பிரதிப்பணிப்பாளர் ரேணுகா பண்டார நாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்டது. இக் கருத்தரங்கிற்கு தரம் 08க்கு மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் . இதன் போது விசப்பாம்புகளும்ää விசமற்ற பாம்புகளும் தெகிவளையிலிருந்து கொண்டுவரப்பட்டது.
பாம்பின் மீதுள்ள பயத்தினை போக்குவதற்காக விசமற்ற பாம்புகளை மாணவர்கள் கையிலே கொடுத்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் பாம்பினை கைகளிலே வைத்திருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.
எதிர்காலத்தில் பாம்புகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கம் என விஞ்ஞான உதவிக்கல்விப் பணிப்பாளர் விஜேந்திர சர்மா தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment