தெல்லிப்பளை வைத்தியசாலை மீள்புனரமைப்பு

 தெல்லிப்பளை வைத்தியசாலையில் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவகற்றல் தொகுதிகளின் திருத்த வேலைகளுக்கான ஆரம்பவிழா இன்று மதியம் 1.30 க்கு இடம்பெற்றது. இவ்விழாவை ரோகித அபய குணவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.  இச்செயற்றிட்டம் நிக்கொட்டினின் உதவியுடன் இடம்பெற்றது. கட்டட நிர்மானத்திற்காக 10345944 ரூபாவும் நீர்ப்பாசனத்திட்டத்திற்காக 8223622 ரூபா நிதியும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என Dr. ஜெயக்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 4 மாத காலத்திற்குள் இப்பணிகள் யாவும் முடிவடைந்துவிடும் என கூறினார்.  இதுவரை காலமும் O.P.T இயங்கிய போதும் குடிநீர்த்தொகுதி மற்றும் கழிவகற்றல் தொகுதி சீராக இல்லாததால் விடுதி இங்கு இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment