யாழ்.பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



உதயன் பத்திரிகை ஆசிரியர்  ஞா.குகநாதன்  தாகக்கப்பட்டதை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று நண்பகல் 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 5 முக்கிய ஊடக இயக்கங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி இருவர் படுகாயம்

யாழ் நகரின் நாவக்குழிப் பாலத்திற்கு அருகில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்துடனேயே யாழ் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு மனுசி

நடிப்பதற்காக சந்தர்ப்பம் எடுத்துத்தருவதாக ஒரு பெண்ணுக்கு வாக்களித்த படப்பிடிப்பாளர் அப்பெண்ணை நடிக்க வைத்துவிடுகிறார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடிக்கவைத்தது திரையில் அல்ல. நியத்தில்... வறுமையின் கொடுமையால் பணத்தைப்பெறுவதற்காக தான் இதைச் செய்கிறார் படப்பிடிப்பாளர். சஞ்சிகை ஒன்றிற்கு அப்பெண்ணின் படம் வேண்டுமென படம் எடுத்து மனதைக்குளிரவைத்துவிட்டு கடனாகப் பணத்தை வாங்கிச்சென்றுவிடுகிறார். ஆனால் கடைஅ சழடட இல்லாத கமராவில் தன்னைப்படம் பிடித்ததை அறிந்தும் அவரின் வறுமையை உணர்ந்து காட்டிக்கொடுக்காது விட்டுவிடுகிறாள். ஆனாலும் அவள் மட்டும் பணக்காரி என்று எண்ணிவிடாதீர்கள். இவளும் வறுமையின் பிடுயில் சிக்கியவள் தான்.
இவ் எதார்த்தமான குறும்திரைப்படம் பிரபஞ்சனின் கதையில் பாலுமகேந்திராவரல் இயக்கப்பட்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முக்கோணக் காதல்

உண்மைக் காதல் என்றால் என்பதை கருவாகக் கொண்டு உருவாகிய குறும்படம் தான் முக்கோணக்காதல். கண்டதும் காதல் என்பது பொய் என உணரவைத்துள்ளார் இயக்குனர் பாலுமகேந்திரா. இது மட்டுமல்ல நிச்சயத்திருமணம் ஒரு வியாபாரம் என்றும் கூறுகிறார். பெண்களிடம் சீர்வரிசை வாங்கி தம் சகோதரிகளுக்கு சீர் கொடுக்கும் போலி உலகு இது. இதிலும் யாதகம் என்னும் முடக்கொள்கை இன்னும் உண்டு எனவும் ஆண்களுக்கு முயற்சி, கம்பீரம், பொறுப்பு, என்பன அவசியம் எனவும் கூறுகிறார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஊடகமும் மக்களும்

ஜனநாயக உலகில் மக்களிடையேயுள்ளதும் மக்கள் வெளிப்படுத்தும் தொடர்பு முறையே அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துக்காட்டுகின்றது. சமுகநிலைஇ அரசியல்நிலை பொருளாதார நிலை என்பவற்றையுட்படுத்தி பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள்,சினிமா, இணையம் போன்றன செயற்படுகின்றன.
இவ்வூடகங்களோடு ஒவ்வொரு தனிமனிமனிதனும் ஏதோ ஒரு தொடர்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கின்றான். கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் உலகின் போக்கிற்கு இவை மக்களை ஈர்த்துச் செல்கின்றன. இவற்றோடு இணைந்திருப்பதன் காரணமாக அறிந்தோ அறியாமலோ அவற்றோடு இசைவாகிக் கொள்கின்றோம். இதனால் அனேகமானவர்களின் வாழ்க்கைப்பயணத்தில் ஊடகம் தாக்கத்தை ஏற்படுத்திக் கெண்டேயிருக்கின்றது.
பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதால் மக்களிடையே ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனாலும் பாதங்களும் ஏற்படாது விடவில்லை. தனியேயுள்ள மனிதனையும் உலகோடு தொடர்புபடுத்தி விடுகிறது இணையம். இது பல்லூடகங்களையும் உட்படுத்தியுள்ளது. இத் தனித்துவமான ஊடகவியல்தான் 'தொடரறா ஊடகவியல்' எனப்படுகிறது. தொடர்பாடல் துறையில் பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய இணையம் ஊடகவியலின் பல வடிவங்களையும் ஒன்றாக இணைத்துவிட்டது. வேறொருவர் வெளியிடும் கருத்துக்களை பார்ப்பவர்களாக இருந்த பொதுமக்கள் இதன்முலம் செய்திகளை வெளியிடுபவராக மாறியுள்ளனர். எடுத்துக்காட்டாக 2004 டிசம்பரில் இலங்கையை சுனாமி தாக்கிய போது தம்மிடங்களில் நடக்கும் சம்பவங்களையும் படங்களையும் ஒலிப்பதிவுகளையும் திரட்டி அனுப்பியிருந்தனர். இதற்கும் மேலாக குறும்படங்கள்இ இசை வெளியீடுகள் போன்றனவும் அதிகரித்துள்ளன. வலைப்பூக்களின் பாவனையால் கட்டுரைகள் இ கவிதைகள் எழுதுபவர்களும் வாசகர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அனேகமானவர்களுக்கு வேலைப்பழு காரணமாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் ஏனையவர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சமுக வலைத்தளங்களின் வருகை முலம் இந்நிலை மாறியுள்ளது. மாறாக இதன் பாவனையால் தற்கொலை இளம்வயதுக்காதல்; போன்றன ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றமை கவலைக்குரியதாகவேயுள்ளது.
மக்களை வெகுவாக சென்றடைந்துவிடும் ஊடகம் தான் தொலைக்காட்சி. அனேகமான தொலைக்காட்சிகள் தொடர்நாடங்களை மையப்படுத்தியே அமைகின்றன. அண்மைக்காலமாக சிறந்த நட்பை இளமைக்காலத்திலிருந்து எடுத்துக்காட்டும் 'சிந்து பைரவி' எனும் தொலைக்காட்சி நாடகம் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் ஈர்த்துள்ளது. ஆனாலும் இவை உறவுகளிடையே ஏற்ப்படும் பிணக்குகளையும் பழிவாங்கும் உணர்வுகளையும் விசாலித்துக் காட்டிவிடுகின்றன. இவை சமுகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்ப்படுத்தி விடுகின்றன.
இலத்திரனியல் ஊடகத்தின் ஆரம்பமாய் உருவாகிய வானொலி மக்களது தொடர்புசாதனத்தில் முதன்மை பெறுகிறது. வானொலிகளில் நிகழ்த்தப்படும் போட்டிநிகழ்சிகள் மக்களைக் கவர்ந்துவிடுகிறது. 'ஒரு நிமிடம் பேசு ஒரு லட்சம் காசு' போன்ற நிகழ்ச்சிகள் சுவாரசியத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்ப்படுத்துகின்றது. தம் குரலிலேயே சொந்தக் கவிதைகளைப்படைக்க வழி சமைக்கின்றன 'கவிராத்திரி' போன்ற வானலை நிகழ்சிகள். இவை மக்களின் படைப்பாற்றலை வளர்க்கின்றன.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கட்டியிழுத்து வைத்திருக்கின்றது சினிமா. நியத்தில் பெறமுடியாத எண்ணங்களையும் கற்ப்பனைகளையும் நம் கண்முன் காட்டிவிடுவதால் இவற்றின் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுகின்றோம். பல அத்தமுள்ள திரைப்படங்கள் சமுகத்திடையே பல்வேறு மாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. அவ்வகையில் அப்பாஇ பிள்ளை உறவை அழகாகக் காட்டும் படம் தான் 'அபியும் நானும்'. இப்படத்தினைப்பார்த்து தம்மை மாற்றிக் கொண்டவர்கள் ஏராளம். பெரிய பெரிய கடைகளில் வேலைக்காய் செல்பவர்கள் முதலாளிகளால் நடத்தப்படும் விதத்தை முழுமையாய் எடுத்துக்காட்டிய படம் தான் 'அங்காடித்தெரு'. இதன் பிறகு தான் அனேகமானவரை இப்பிரச்சனை சென்றடைந்தது. ஆனாலும் சமுகத்தைத்தீயவழியிலும் செலுத்த மறுக்கவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இளம் வயதுத்திருமணம்இ இளம் வயதுக்கற்ப்பம்,கொலைஇ கொள்ளைஇ கொஸ்ரி மோதல்களஇ; விவாகரத்துஇ கலாச்சார சீர்கேடு இவையாவும் சினிமாவின் தாக்கம் தான். சில படங்கள் எதார்த்தத்தைத் தந்த போதும் அனேகமான தமிழ் சினிமா மக்களைத்தவறான பாதைக்கேயிடுட்டுச்செல்கின்றது.
மக்கள் ஊடகங்களின் ஆரம்ப கட்டமாய் உருவாகிய செய்திப்பத்திரிகைகள் பல்வேறு வகையான ஊடகங்கள் உருவாகிய போதிலும் சமுகத்தின் வளர்ச்சிப்போக்கில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியதால் தான் இன்றும் நிலைத்துநிற்கின்றன. காலையில் பத்திரிகை பார்க்காதிருப்பவர்கள் மிகக்குறைவு. பாமர மக்களும் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளக்கூடியதாய் அனைவரையும் இவை சென்றடைகின்றன. இந்தபோதும் பத்திரிகைகள் பக்கச் சார்பாய்த் தொழிற்ப்படுவதால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றன.
மக்களின் ஒவ்வொரு அசைவிலும் பங்கு கொள்ளும் ஊடகம் சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுமாயின் உலகின் வெற்றிப்பாதையை இலகுவில் அடையமுடியும்.
                      

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS