''தண்ணீர்'' குறும்படம்

                        

AAA மூவீஸ் வழங்கிய 2011 ம் ஆண்டிற்க்கான சிறந்த குறும்படத்திற்க்கான விருதை தட்டிச்சென்றது ''தண்ணீர்'' குறும்படம்.  இத்தோடு சிறந்த இயக்குனர், சிறந்த பாடல், சிறந்த குழந்தை நட்சத்திரம் என அடுத்தடுத்து விருதுகளைக் குவித்த பெருமையும் இதற்க்குத் தான். 

யுத்தம், வறுமை, காதல் எனப் பல்வேறு கோணங்களைக் குறும்படங்கள் பிரதிபலித்தாலும், ஏற்ப்பட்டதும் ஏற்ப்படப் போவதுமான ஓர் பிரச்சனை. .  இழந்ததும் இழக்கப்போவதுமான ஓர் துன்பம்... இவற்றை உயிரோட்டத்தோடு இணைந்து உணரவைத்துள்ளது ''தண்ணீர்'' குறும்படம்.

எந்தப் படைப்பு மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறதோ அது தனக்கான இடத்தையும் தக்க வைத்துக்கொள்ளும். தண்ணீர் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் இது தண்ணீரின் ஏக்கத்தை பதிவுசெய்துள்ளது. இரு இளம் சிறார்கள் முலம் எதார்த்தத்தோடு கூடிய உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்கெண்ட கதையை விளக்க முகிலனுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை. வார்த்தைக்கு தடைபோட்டுவிட்டு இசையினாலேயே கருவை நிலையிருத்தியிருக்கிறது கதை. வெறுமனே சுவைக்காக எழுதப்பட்ட கதையின்றி நிஜத்தினையும் நியாயப்படுத்தியுள்ளது. நீரின் தேவை அவசியம் எல்லோரும் அறிந்ததே.  இருந்தாலும் இன்னமும் வீண்விரயங்களை நிறுத்தவில்லை இம் மக்கள். தண்ணீர்ப் பிரச்சனை எங்கோ தொலைவிலே இல்லை. எமக்கே ஏற்ப்பட்டுவிட்டது. போரால் பட்ட கொடுமைகள் ஓய்ந்து போக உலகே எதிர்நோக்கப்போகும் பாரிய சவால் தான் ''தண்ணீர்ப் பிரச்சனை''.இனியாவது நீரின் பெறுமதியை உணருங்கள் எனநெஞ்சங்களில் மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது இப்படம் . 
படைப்பாளிகள் எதிர்காலத்திற்கு வழிசொல்லுபவர்கள். முகிலனும் அதையே செய்திருக்கிறார். ஆரோக்கியமான விடயம். கோடிக் கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் விளம்பரங்களை விட சில நிமிடங்களிலேயே தண்ணீரின் ஏக்கத்தை கண்முன்னே காட்சிப்பபடுத்தியுள்ளார் இயக்குனர். 
இது போன்ற களம் படைப்பாளி செழுமை பெற வழிவமைத்துவிடும். சகோதரியின் தாகத்தை தீர்க்க போராடும் சிறுவன்.. சிறார்களின் பக்குவத்தைக் காட்டியுள்ளது. காட்சிகளைக் கச்சிதமாய் மனனப்படுத்த இசை தன் பணியை சிறப்பாகவே செய்திருக்கிறது. சிறுவனின் அடுத்தடுத்த துடிப்பு தான் இவ்இசை. படம் நடுவே வரும் பாடல்.. “ காய்ந்து போன தேசத்தில் ”.. கதையைப் பூரணப்படுத்தியுள்ளது. உணர்வுகளைக் கொந்தளிக்கவும் வைத்துள்ளது. வரண்டு போன தேசத்தில் நீர் இல்லை. மழை இல்லை.  விவசாயம் இல்லை. என அத்தனையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
நாடகத் தன்மைகளை இன்னும் தாண்டாத இந்தியப் படங்களுக்கு மத்தியில் புறவாழ்க்கையின் புரிதல் இத் தண்ணீரில் இருக்கிறது. வாழ்வியலோடு கூடிய இது போன்ற படங்கள் வரவேற்க்கத் தக்கவை. பாராட்டிற்க்கு உரியவை.
                                  
                                                                                                                 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முதியோர் இல்லம்

இது மனிதக் காட்சி சாலை . .
பால் குடித்த மிருகங்கள் அடிக்கடி
வந்து பார்த்துச் செல்கின்றன.

                     

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவசரம் - குறும்படம் ஒரு பார்வை...

யுத்த சூழல், வறுமை போன்றவற்றை மையப்படுத்தி வெளியாகும் குறும்படங்கறுக்கு மத்தியில் ''அவசரம் '' குறும்படம் மாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.

அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் இளவயது காதலர்களின் நிலையைக் கருவாகக் கொண்டமைந்த படம் தான் இது. வழக்கமான சோகப்பாணியில்லாது மகிழ்ச்சியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது கதை. எதார்த்தமான காட்சிகள், சாதாரண வார்த்தைப்பிரயோகங்கள் எல்லாமே பார்வையாளரை கதைக்குள் ஒன்றித்து வைத்துள்ளது.

தென்னிந்தியப்படங்களில் இல்லாத யாழ்ப்பாண மண் வாசனை படத்திற்கு கிடைத்த வெற்றி. புதுமுக நடிகர்கள். . இளவயதும் கூட.  சிறிது தளர்ச்சிகள் இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டத்தான் வேண்டும். முன்னனுபவமில்லாது எடுத்துக் கொண்ட செயலை வெற்றிகரமாகவே முடித்துள்ளனர் படக்குழுவினர்.
கருவிற்கேற்ப்ப காட்சிகளைக் கூட்டியிருந்தால் படம் முழுமைபெற்றிருக்கும்.

புதுமுகங்களான..  இயக்குனர் கஜதீபன். நடிகர்கள் - சிர்த்தார்த் யாழினி. அபிராமனின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது ''அவசரம்''

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS