புகைப்பட இதழியல் கற்கைநெறியின் ஆரம்பகட்டமாக எனது தேடலில் யாழ் நகரின் சில காட்சிகள்..




புத்துயிர் பெற்ற நிலையில் யாழ். நூல் நிலையம்  
 
 
யாழ்  நகரின்  மத்தியில் பொது நூலகம் அமைந்துள்ளது.  இதன் கட்டுமானப்பணிகள் 1933  இலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டடம் 1959  ம் ஆண்டு  திறந்துவைக்கப்பட்டு  1960 ல் முழுதாக கட்டி முடிக்கப்பட்டது.  இது '' மோகிள்'' வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  சிலரது தனிப்பட்ட நூல்களின் சேகரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நூலகம் 1981  ல் எரியூட்டும் வரை கிட்டத்தட்ட 97000 நூல்கள் காணப்பட்டன. மே மாதம் 31  ம் திகதி சில விசமிகளால் இது எரியூட்டப்பட்டது.  பின்னர்  2003  ம்  ஆண்டு மாசி  மாதம் 30000 நூல்களுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இங்கு தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள்  வந்து செல்கின்றனர். இங்கு பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்படுவதால் அன்னியசெலவானியும் அதிகரிக்கின்றது.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment