உலக ஓட்டத்தில் மாறுபடும் கலாசாரம்...


இப் பரந்துபட்ட உலகில் கோடான கோடி மனிதர்கள்  வெவ்வேறு தேவைகளுடனும் ஆசைகளுடனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப் பூமியில் பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு தேடலில் தன் பயணத்தை இறக்கும் வரை மனிதன் நகர்த்திக்கொண்டிருக்கிறான். இப்பிரபஞ்சத்தில் பூகோள அமைவிற்கேற்ப வௌ;வேறு பிரதேசங்களிலும் வேறுபட்ட மனித இனங்கள் வாழ்க்கை நடத்துகின்றன. ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் தேடல்களுக்கும் ஏற்ப்ப அவனின் வாழ்வியலும் மாறுபட்டது. வாழ்வியல் என்பது கலை,கலாசாரம்,சமுகம்,பண்பாடு என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.


கலாசாரம் என்ற போர்வை ஒவ்வொரு சமுகத்திற்கும் போர்த்ப்பட்டுள்ளது. வேறு உயிர்கள் போன்று மனிதனும் வாழ்க்கை நடத்தவில்லை. அவற்றிடமிருந்து மட்டுமல்ல வேறு மனிதர்களிடமிருந்தும் தாம் வாழும் இடத்திற்கேற்ப கலாசாரத்தை கொண்டுள்ளான். கலாசாரம் என்பது உணவு, உடைஇ உறையுள், கலை,சமயம, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கலாசார சீர்கேடு ஆணும் பெண்ணும் காதல் செய்கின்றனர். திருமணமான பெண்கள் வீட்டிற்குள்ளே இருப்பதில்லை. இளைஞர்கள் சமுக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.
உலக ஓட்டத்திற்கு ஏற்ப்ப வாழ்வியலை மாற்றுவது கலாசார சீர்கேடா? கிணற்று தவளையாய் இருந்த சமுகம் உலகோடு ஒத்து இயங்க எத்தணிப்பது கலாசார சீர்கேடா? தற்கால பெண்கள் சேலை கட்டுவதில்லை. என்பதும் இவர்கள் கருத்து. ஆடைக்குள்ளா இருக்கிறது கலாசாரம் ? அடுப்பு ஊதும் பெண்களை அரியணையில் பார்ப்பது பொறுக்குதில்லை இவ் வீண்பேச்சு பேசுபவர்களுக்கு ..

கலாசாரம் என்பது மாறுபட்டு கொண்டிருப்பது தான். ஆதி மனிதன்; ஆடையின்றி தான் இருந்தான். பின்பு மானத்தை காப்பதற்காக இலை குழைகளை அணிந்தான். பின்பு தான் ஆடை அணிய ஆரம்பித்தான். வாழ்வியல் வளர்ச்சியில் கலாசாரமும் மாற்த்திற்கு உள்ளாகிறது.
சேலை கட்டிய பெண்கள் சுடிதார் அணிவதை ஏற்றுக்கொண்ட சமுகம் ஜீன்ஸ் போடுவதை கண்டிக்கிறது. பெண்களை சேலை கட்ட எத்தணிப்பவர்கள் அதிகம் ஆண்கள் தான். இவர்களே மேலைத்தேய நாகரீகத்தில் அணிவது ரெனிம் ஜீன்ஸ் அதுவும் இறுக்கமாக இறக்கமாக.. சினிமாவில் வரும் நாயகர்கள் போல பாவனை செய்து தாம் மட்டும் உடுத்திக்கொள்கிறார்கள். பெண்களை மட்டும் பாலியல் ரீதியில் சித்தரிக்கின்றனர். சேலையை விட கவர்சி உடை வேறு ஏது? அதுமட்டுமன்றி சேலையில் பெண்கள் பொம்மைகளாக தான் இருக்க முடியும். இலட்சியப்பாதையில் பயணிப்பதற்கு ஆடை முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. இதில் ஆணாதீக்கமும் தலையோங்கத் தான் செய்கிறது.

காதல் கொள்வதும் மணமுடிப்பதும் இன்றுதான் நடக்கிறதா? விபச்சாரம் உட்பட பல சீர்கேடுகளும் தாத்தா, பாட்டி காலத்திலேயே இங்கு நடந்தது தான். புதிதாக ஒன்றும் முளைத்துவிடவில்லை.
முன்னய காலங்களில் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான தூரம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அவ்வாறு அல்ல. உலகமே உள்ளங்கைக்குள் வந்து விட்டது. சமுக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பு ஊடகங்களுக்கும் மக்களுக்குமான வெகுவான ஒன்றிப்பு என்பவற்றின் ஆதீக்கத்தால் செய்திகளும் சம்பவங்களும் மறுகணமே பதிவாகிவிடுகின்றன.
மனிதன் வாழ்வாங்கு வாழ்வதில் அவனின் கலாசாரமும் பங்கு கொள்கிறது. ஆனால் இவற்றை சின்னத்தனமாக சித்தரிக்காது முற்போக்கான சிந்தனையுடன் வரவேற்பது சிறந்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றங்களை உள்வாங்கி வாழப்பழகி கொள்வது ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்.
' உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் 
கல்லாதார் அறிவிலார்'

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment