ஆளுமையில் விருத்தி தந்த நாடக பயிற்சி பட்டறை



ஒரு அதிஸ்டம் என்றே சொல்லலாம். செயற்திறன் நாடக அரங்கு மூலம் கொழும்பில் இடம்பெறும் பயிற்சி பட்டறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மன் நாட்டின் உதவியுடன் புழுநுவுர்நு நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. நான் பங்கு பெறும் முதல் பயிற்சி பட்டறை இது. ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன் பத்து பேர் கொண்ட குழுவாக நண்பர்கள் கூட்டம் சென்றிருந்தோம். எமக்கு தலைமையாக செயற்திறன் நாடக அரங்க இணைப்பாளர்திரு தேவானந் அவர்கள் வந்திருந்தார்.


அதற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்து கலைஞர்கள் வந்திருந்தனர். பெரும்பாலானோர் சகோதர மொழியை சேர்ந்தவர்கள். பார்த்த மறுகணமே அனைவரும் நண்பர்களாகிவிட்டோம். அங்கு இடம்பெற்ற உரையாடல்கள் சலி;ப்பை தந்தாலும் செயன்முறைகளில் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டோம். ஏனையோரின் மனநிலையும் இதுவாக தான் இருந்தது.
இன்றய அவசரமான உலகில் நேரம் என்பதை விலை கொடுத்தாவது வாங்க முடியாதா என தவிக்கின்றனர் பலர். அதற்குள் நானும் ஒருத்தி தான். இந் நிலையில் இரண்டு நாட்களும் எமக்கு கிடைத்த பொன்னான நாட்கள். எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய மாய உலகிற்குள் வாழ்ந்த நாட்கள் அவை.

அதிகமாக அரங்க விளையாட்டுகளில் தான் ஈடுபட்டிருந்தோம். இதன் மூலம் எமது தொடர்பாடலும் விரிவடைந்தது. கோழி கொட்டான்இ ஆடும் வீடும்இ சங்கிலி புங்கிலி போன்ற எமது விளையாட்டுக்களை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து சேர்ந்து விளையாடினோம். அதே போல் அவர்களது விளையாட்டுக்களையும் எம்மோடு கூடி விளையாடினார்கள். சக்தி பரிமாற்றம்இ வனி வனி போன்ற விளையாட்டுக்களை நாம் அவர்களிடம் கற்றுக்கொண்டோம். இவ் விளையாட்டுக்கள் எமது ஆளுமையில் விருத்தியை தந்தது. அதை விட் எமது ஆர்வத்தையும் வேகத்தையும் தூண்டியது. நாம் அனைவரும் இனம்இ மதம் வேறுபாடின்றி துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாவும் செயற்பட்டோம்.
இது தவிர சில நடனக்கலைகளையும் கற்றுக் கொண்டோம். தூண்டல்களுக்கேற்ப துலங்கல்களை ஒரு கலையாகவே வெளிப்படுத்தினோம்.

சற்று வித்தியாசமாக சுவரிலுள்ள சிற்பங்கள் போல நாமும் எம்மை பாவனை செய்து மற்றவர்களோடு தாங்கிக்கொண்டு ஒவ்வொருவர் தோழிலும் ஒவ்வொருவர் ஏறி பிரமிட் போல ஒரு வடிவை ஏற்படுத்தி கொண்டோம். அவ்வாறே மகிழ்ச்சிஇ கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தினோம். வித்தியாசமான அனுபவம் அது. எமது கற்பனை திறனுக்கும் வழி சமைத்து தந்திருந்தனர். ஒருவர் சிற்பி போலவும் மற்றவரை கிளே போலவும் பாவித்து மற்றவரை சிற்பமாக செய்ய வேண்டும். எமது ஆற்றலுக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப பல சிற்பங்களை செய்தோம். எம்மையும் கிளேயாக பாவித்துக் கொண்டனர் ஏனையோர்.
இது போன்ற பயிற்சி பட்டறைகள் எமது ஆளுமையை விருத்தியடைய செய்யும் என்பதால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறந்த ஒன்று.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

SnPP2013 said...

ளகனனகனக

Post a Comment