சென்னை மாநகரின் கரும்புள்ளி கூவையாற்றைச் சூழ உள்ள குப்பம்

பொருளாதாரம், கல்வி, தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறது சென்னை மாநகரம். எண்ணற்ற கட்டடங்கள்,கோயில்கள், பல்கலைக்கழகங்கள், கடற்கரைகள் என எல்லாவற்றையும் உட்கொண்டது. அத்தோடு சுற்றுலாத்தலங்களைம் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இச்சிங்கார சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். .  
சுமார் ஜம்பது வருடங்களிற்கு முன்பு மக்கள் பயன்பாட்டில் தூய்மையாய் இருந்தது கூவையாறு. ஆனால் தற்போது இது சென்னையின் கழிவுகளை தாங்கும் சாக்கடையாக மாறியுள்ளது. இவ் ஆற்றின் இரு புறத்திலும் நீண்டு பரந்து காணப்படும் சேரிகள்தான் சென்னையிலுள்ள கரும் புள்ளி.
இச்சேரிகளில் ஒன்று தான் நெடுங்செழியன் நகர். சுமார் ஜம்பதாயிரம் குடும்பங்கள் ஏழாயிரம் மாணவர்கள் இங்கு வசிக்கின்றனர். ஒரே நாளில் துன்பப்பட்டு இறப்பவர்கள் ஒரு வகை. தினம் தினம் துன்பப்பட்டு இறப்பவர்கள் இன்னொரு வகை. ஆனாலும் இங்கும் மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
பிரதான வீதியிலேயே குப்பைகள் நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்,  குப்பைகளும் கழிவு நீரும் நிரம்பிய தெருக்கள், அணிதிரண்டிருக்கும் இலையான்கள், சிதைவடைந்ததும் விளம்பர சீலைகளை கூரையாக கொண்டதுமான சிறிய சிறிய வீடுகள். ஆடையின்றிய அழுக்கான சிறுவர்கள்,  அக் கழிவு நீர் வழிந்தோடும் தெருக்களிலும் ஆடைகளை துவைப்பவர்கள்.  சமையல் செய்து இத் துர்நாற்றத்திலும் உண்கின்றனர். கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் பள்ளி செல்லாது தெருக்களில் விளையாடுகின்றனர். மீறிப் பாடசாலை செல்பவர்களும் அங்கு சென்று கல்வி கற்கவில்லை. ஆண்களும் பெண்களும் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு சமுதாய சீர்ழிவுகளிற்கும் தணைபோகின்றனர். படிப்பறிவு, சுகாதாரம் என அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்கள். சுத்தம் என்னும் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத சமூகம் தான் இது.
இவ்வாறு கூவையாற்றை சுற்றி குப்பத்தில் இருப்பவர்கள் யார்? அத்துமீறிக் குடியேறி அரசிடம் சகல சலுகைகளையும் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். சென்னை மாநகரம் என்பதால் இவ்விடத்தையும் விட்டுச் செல்வதாக இல்லை அவர்கள். பழியை அரசு மீது போட்டு விட்டு தம் நிலையை உணராது தம் வாழ்வைத் தாமே அழிக்கும் நியாயமற்ற மனிதர்கள் தான் இவர்கள். சம்பாதிக்க வேண்டும் என்ற பொறுப்பற்ற ஆண்கள்.. பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களை அனுப்பாத பெற்றோர்கள்.. இவற்றோடு அடிப்படை வசதிகளே அற்றவர்கள்.

இங்கு அதிகமான பெண்கள் விபரீதமானதோர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆட்டுக்காலை வெப்பப்படுத்தி உணவு விடுதிகளிற்கு அனுப்புகின்றனர். இதன் தயாரிப்பு சுகாதார சீர்கேடுடனேயே நடைபெறுகிறது.  இலையான்கள் , விலங்கு கழிவுகள் , கழிவு நீர்; , சலவைநீர் நிறைந்த நடைபாதையிலேயே ஆட்டுக்கால்களை காய விடுகின்றனர்.

இங்கிருந்து அனுப்பப்படும் ஆட்டுக்காலையே பெரிய உணவு விடுதிகளில் பாயா தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் வருமானத்தையும் ஈட்டிக்கொள்கின்றனர்.
தலைமுறை தலைமுறையாக இங்கு வாழும் இச்சமூகத்தை சேர்ந்த துர்க்கா என்பவர் தனது வாதமாக ‘ பெரிய மாடியில இருந்து வாற கழிவு தண்ணி எங்க வீட்டுக்கு முன்னால தேங்குது. இதால எங்க பிள்ளைங்களுக்கு நோய். இந்த நாற்றத்தில தான் நாம சமைச்சு சாப்பிடனும். இந்த கழிவு தண்ணில இருக்கிற கிருமிகளால தொற்று நோயும் வருது. அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கிமாரி இல்லை. தேர்தல் காலங்கள்ல மட்டும் இங்க வருவாங்க.’ எனக் கூறினார்.
ஆனாலும் இவர்களை வறியவர்கள் என ஒத்துக்கொள்ள முடியாது. ஆண்களோடு சேர்ந்து பெண்களும் சம்பாதிக்கின்றனர். மோட்டார் , சயிக்கிள் , தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, தங்க நகைகள் என எல்லாமே இவர்களிடம் உண்டு.
தீர்வு இல்லாத எதுவும் இல்லை. மனிதனால் முடியாததும் இல்லை. தாமே தம் தலையில் மண்ணை வாரி போடுவதை யாரால் தடுக்க முடியும். தாம் இயல்பாகவும் மற்றவர்களைப் போலவும் வாழ்வதற்கு தாமே உணர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment